Friday, January 11, 2013

ஒப்பியல் நோக்கில் தாகூரின் கீதாஞ்சலி-பாரதியின் காட்சிகள் பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்

     ஒப்பியல் நோக்கில் தாகூரின் கீதாஞ்சலி-பாரதியின் காட்சிகள்

பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.

ஆய்வின்முன்னுரை
    நூறு ஆண்டுகளுக்கொரு முறைதான் மகாகவிகள் தோன்றுகிறார்கள்.  இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரே காலக்கட்டத்தில் இரு மகாகவிகள் கவியாட்சி புரிந்தார்கள் என்றால் அவரகள் மகாகவி பாரதியம் தாகூரும்தான்.  எளிய சந்தம்.  எளிய மொழிநடை, எளிய மக்கள் என்பதாக எழுதி நாட்டிலும், சமுதாயத்திலும், படைப்பிலக்கிய வடிவத்திலும் மாற்றத்தைக் கொண்டு வந்த பாரதி.  அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குச் சமமாக இந்திய இறையியலை உலகமொழியில் மொழிபெயர்த்துக் கீதாஞ்சலிசெய்து நோபல்பரிசினைத் தட்டி வந்த இரவீந்திரநாத் தாகூர் ஆகிய இருவரின் கவிதைகளை ஒப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பாரதியும் தாகூரும்
    விடுதலைப்போரில் பாரதி, தாகூர் ஆகிய இருவரின் எழுத்துக்களும் போர்வாட்களாய் திகழ்ந்தன.  இருவருக்கும் சமயப்பார்வைதான் அடிப்படை; இருவரும் தாய்மொழிப்பற்றிலும், தாய்மொழிக் கல்வியிலும் நாட்டம் கொண்டவர்கள்.  இருவருக்கும் இசைஞானம் உண்டு.  இருவரும் உலக இலக்கியங்களில் ஆழமான பார்வை உடையவர்கள்.  இருவரும் ஒரே நூற்றாண்டில் படைப்பிலக்கியம் படைத்த சமகாலப் படைப்பாளிகள் எனப் பல்வேறு கூறுகளில் ஒன்றுபட்டாலும் சில கூறுகளில் வேறுபாடுகின்றனர்.
    தாகூர் வறுமையறியாத செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தவர்;  பாரதியோ வறுமையில் வாழ்ந்த சராசரி குடும்பத்தவன்.  பொருளீட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாததால் தாகூரின் மன் அமைதியான ஆன்மீகத் தேடலைப்படைப்புகளில் நிகழ்த்தியது.  ஆனால் பாரதியோ வயிற்றுப்பிழைப்பிற்காகத் தேச விடுதலைக்காக நிம்மதியற்ற குழப்பமான மனநிலையில் சாவல்களுக்கிடையில் இதழ்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.  தாகூர் வாழ்ந்ததோ 80 ஆண்டுகள்;  பாரதி வாழ்ந்ததோ 39 ஆண்டுகள்.  தாகூர் உலகம் சுற்றியவர்.  பாரதியோ இந்திய எல்லை தாண்டாதவர்.  தாகூரோ மனிதனைக் கீழ் நிலையாக்கி.  பரம்பொருளை உயர்நிலையாக்கிய மனத்தவர்.  பாரதியோ பாட்டுக்கலந்திடப் பத்தினிப் பெண்ணைப் பராசக்தியிடம் கேட்டதோடு மட்டுமல்லாமல் அந்தக் காட்டு வெளியினிலே அம்மா நின்றன காவலுற வேண்டும் என்று நெருக்கமாய் நின்று உரிமையோடு பேசியவர்.  தாகூரின் கவிதைமொழி செவ்வியல் சார்ந்த உயர்மொழி; பாரதியின் கவிதைமொழியோ மக்கள்மொழி.  பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருவருக்கும் இருந்தாலும் இருவருமே மகாகவிகள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க இயலாது.  
மகாகவி பாரதியின் கவிதைகள்
    எமக்குத் தொழில் கவிதை என்று உறுதியாய்ச் சொன்னவர் பாரதி.  தேசமும் தெய்வமும் விலகி மக்களை மக்கள், கவிதையைத் தந்து தமிழில் புதுக்கவிதை வரலாற்றைத் தொடங்கி வைத்தவர்.  இந்திய தத்துவ மரபினைத் தமிழ்ப்படுத்தித் தந்த கவிஞர்.  பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்.  தரையில் நின்றுகொண்டு விரிவாகத்தன்னை முதன்மைப்படுத்தாமல் நிலைகெட்ட மனிதரை நோக்கி நெஞ்சு பொறுக்காது கவிதை பாடியவர்: வங்க மொழியிலமைந்த பங்கிம்சந்திரரின் வந்தே மாதரம் பாடலை மொழிபெயர்த்துத் தமிழுக்குத் தந்தவர்.  மொத்தத்தில் பாரதியின் கவிதைகள் மக்கள் உயரக் கருதிய மனிதநேய உணர்ச்சிக் கவிதைகள்.
இரவீந்திரநாத் தாகூர் கவிதைகள்
    தாகூரின் கவிதைமொழி அறிவுப்பூர்வமானது. வைணவ மரபு சார்ந்த வேதப்பிரிவுகளைச் சார்ந்தது.  உபநிடதங்கள்.  வங்க நாட்டுப்புற இலக்கிய வகைகள்.  திரு. விவிலியத்தின் சாலமோன் மன்னரின் சங்கீதச் சாயலை ஒத்தனவாய் அமைகின்றன.  அவரின் கவிதைகள் மக்களின் துன்பத்தை விடத் தாகூர் முக்கியத்துவம் தந்துதேடியது.  பிரபஞ்ச இரகசியத்தையும் இயற்கையின் பிரம்மாண்டத்தையுமே மகாத்மாகாந்தியுடன் முரண்படுகிற அளவு அவரது ஆளுமை பரந்து விரிந்திருந்தது.  1907இல் அவரது 45 வயதில் இந்தியஅரசியல், பொருளாதாரம் போன்றவற்றில் கவனம் செலுத்தினார்.  சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள்.  நாடகங்களை எழுதித் தாகூர் பெரும்புகழ் பெற்றார்.  மனைவி, இரண்டாம் மகள், கடைசி மகன் இறப்பு அவரை நிலைகுலைய வைத்தது.  கவுதம புத்தரைப் போன்ற சுயதேடலோடு அவர் அமைதியைத் தேடி சாந்திநிகேதனை உருவாக்கி அதில் தம்மைத் தொலைத்தார். 1912இல் வங்கமொழியில் உருவான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
    தாகூரின் கீதாஞ்சலியின் கையெழுத்துப்பிரதி மேலைநாட்டுப் புகழ்மிக்க கவிஞரான டபிள்யூ. யேட்ஸை மலைக்க வைத்தது.  நான் தாகூரின் கவிதைப் பிரதிகளை எல்லாப் பொழுதுகளிலும் படித்து மலைத்தேன்.  நான் உணர்ச்சி வசப்படுவதை யாரேனும் பார்த்துவிடும்வரை அதில் மூழ்கி இருப்பேன். என்றார்.  யேட். ஆங்கில மொழியில் கீதாஞ்சரி வெளியானபோது அதற்கு முன்னுரை தந்திருந்தார்.  ரமணருக்கு ஒரு பால் பிராண்டன் கிடைத்தது  மாதிரி தாகூருக்கு யேட் கிடைத்தார்.  1913ல் உலகப் புகழ் பெற்ற கீதாஞ்சலி ஆங்கில மொழிபெயர்ப்புக்கு உலகின் உன்னத பரிசான நோபல் பரிசு கிடைத்தது.  இந்திய இலக்கியத்தைத் தாகூர் உலக இலக்கியமாக்கினார்.
பாரதி-தாகூர் கவிதைகள் ஒப்பீடு
    பாரதி தாகூரைப் பற்றி ஒப்பிட்டு ஆய்வு நூல் வெளியிட்டுள்ள இலங்கைப் பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதி தமது “இரு மகாகவிகள்“ எனும் நூலில் சுத்தானந்த பாரதியார் எழுதியுள்ள பேட்டியைச் சுட்டிக்காட்டுகிறார்.  நோபல் பரிசு பெற்ற தாகூரோடு பாரதி கவிதைப் போட்டியிட விரும்பியதாகவும் அதைத் தம் சீடனோடு விவாதித்ததாகவும் காட்டுகிறார்.  பாரதி பேசியதாக இவ்வாறு குறிப்பிடுகிறார்.  பாரதி! ஓய் ஓய் நாம் தாகூருக்கு ஒன்று சொல்லுவோம் நீர் வங்கக்கவி?  நாம் தமிழ்க்கவி; விக்டோரியா ஹாலில் கூட்டம் கூட்டுவோம்.  உமது நோபல் பரிசைச் சபை முன் வைப்போம். நாமும் பாடுவோம். நீரும் பாடும். சபையோர் மெச்சுவார்கள்.  உடனே உமது கையால் எமக்கு நோபல் வெகுமதியைத் தந்து செல்லவேண்டியது என்போம்“ (இரு மகாகவிகள். பக்.17).
    பாரதியார் கவிதைகளில் உள்ள “காட்சி“ என்ற கவிதையைத் தமிழின் முதல் வசனகவிதை முயற்சி எனக்குறிப்பிடும் வல்லிக்கண்ணன் (புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும். பக்.12) வால்ட் விட்மனின்.  “புல்லின் இதழ்கள்“ எனும் பாடலை அடியொற்றித் தமிழில் பாரதி தந்தார் எனக் குறிப்பிடுகிறார்.
    மகாகவிபாரதியின் வாழ்க்கை வரலாற்றினை ஆங்கிலத்தில் எழுதியுள்ள பேராசிரியர் பி.மகாதேவன், பாரதி இரவீந்தரநாத் தாகூருடன் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டினார். தாகூரின் கீதாஞ்சலி மாதிரி அவரும் இதை எழுதினார் என்று கருத்து தெரிவித்துள்ளார். இக்கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் வால்ட் விட்மனின் தாக்கத்தில் பாரதி வசன கவிதை படைத்தது கீதாஞ்சலியின் வரவுக்குப் பின்தான் என்பதை மறுக்க இயலவில்லை.  கீதாஞ்சலியையும் காட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சில இடங்களில் ஒற்றுமை தென்படுகிறது.
    பாரதியின் காட்சிகளின் கருவோடு தாகூரின் கீதாஞ்சலியின் கவிதைக் கரு ஒத்துப் போகிறது.  இயற்கை அதாவது ஒளி.  நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், கடல், மலை, நதி, யாவும் ஏகாந்தமானது.  இனிமையானது என்பதையே தாகூரும், பாரதியும் வெவ்வேறு சொற்களால் வெளிப்படுத்தி உள்ளனர்.
கீதாஞ்சலியும் பாரதியின் காட்சிகளிலும் ஒளிதான் கவிதைக்கரு.
கீதாஞ்சலி
    ஒளி எங்கே அந்த ஒளி ஆசைத் தணலால் அதைத் தூண்டிச் சுடர்விடச் செய்.  மேகத்திரள்கள் வாளை மறைந்தன; அடாத மழைவிடாது கொட்டுகிறது என்னுள் தோன்றும் கிளர்வின் காரணம் புரியவில்லை; வானில் கணநேரத்தில் மின்னல் ஆழம் நோக்கி என் கவனம் விரைகின்றது.  இரவின் பாடல் அழைக்க இருப்பிடம் தெரியாமல் பாதை தடுமாறுகிறது ஒளி எங்கே அந்த ஒளி ஆசைத் தணலால் அதைத் துண்டிச் சுடர்விடச் செய்
காட்சி
    ஒளியே நீ யார்? ஞாயிற்றின் மகளா விளக்குத் திரி? காற்றாகிச் சுடர் தருகின்றது இடியும்.  மின்னலும் நினது வேடிக்கை புலவர்களே மின்னலைப் பாடுவோம் வாருங்கள்.  மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக; நமது நெஞ்சில் மின்னல் விசிறிப் பாய்க நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக.  என்ற பாடல் அடிகளால் உணரமுடிகிறது.
    தாகூர் கீதாஞ்சலியிலே ஒரு பாடலில் கூறிய செய்தியைப் பற்றி அணுகி ஆராய்ச்சி செய்து தத்துவ ரீதியாக வேத வரிகளோடு அழகியல் சேர்த்து 46 பாடல்களில் வேறுபட்ட வடிவத்தில் தந்து மலைக்க வைக்கிறார்.  இப்பாடல்கள் கீதாஞ்சலியை விட ஆழமானதாகச் செறிவு மிகுந்ததாக பொருள் பொதிந்ததாக உள்ளதைக் காண முடிகிறது.
இறை வேண்டல்
1.    உலகத்தின் எந்திரவாழ்க்கைக்குள் சின்னாபின்னப்பட்ட மனிதன் இறைஞ்சும் இறை வேண்டலே கீதாஞ்சலி.  பாரதியின் போக்கும் அப்படித்தான்.
    நல்லதோர் வீணை செய்தே அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
    சொல்லடி சிவசக்தி எனைச்
    சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்
    வல்லமை தாராயோ இந்த மாநிலம்
    பயனுற வாழ்வதற்கே
எனும் பாரதியின் குரலை,
என் இறைவனே
    உன்னுடன் இயைந்து பாட என் இதயம் ஆசைப்படுகின்றது.
    ஆனால் ஒரு நல்ல குரலுக்காய்
    அது பயனற்றுப் போராடிக் கோண்டுள்ளது.
    என்னால் பேச இயலும்? ஆனாலும் பேச்சு கீதமாகாதே
    அதனால் திகைத்து நான் அழுகிறேன்.
என்று தாகூரின் சொற்கள் மெய்ப்பிக்கின்றன.

ஆய்வு முடிவுரை
    பாரதியின் காட்சிகளில் இன்னும் ஆழ்ந்த பொருள் பொதிந்துள்ளது.  தாகூரின் கீதாஞ்சலியோடு பின்னிப் பிணைந்து காணப்படுகிறது.  தாகூரின் கங்கையாறும், பாரதியின் தாமிரபரணியும் கலப்பது கவிதை எனும் கடலில்தான்.  பிரித்துப் பார்க்க முடியவில்லை.  தாகூர் தம் கவிதைகளைத் தாமே மொழிபெயர்த்து மேலைநாடுகளுக்கு அறிமுகப்படுத்தியதால் நோபல் பரிசு கிடைத்தது.  பாரதிக்கு அதைவிட முக்கியமான செயல்கள் இருந்திருக்கலாம்.  பரிசுகளை வைத்து நாம் பாரதியை மதிப்பிட்டு விட முடியாது.  “அன்ன சத்திரம் ஆயிரம் வைப்பதை விட ஆலயங்களை அடுக்கடுக்காய் கட்டுவதை விட அங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் உன்னதம் என்றார் பாரதி.  தாகூர் அதை தம் வாழ்வில் சாந்தி நிகேதனாய்ப் உருவாக்கிக் காட்டினார்.  தாகூரின் சிறுகதைகளைப் பாரதி மொழிபெயர்த்தார்;  தாகூரை மிக மதித்தார்.
    கீர்த்தியடைந்தால் மகான் இரவீந்தரைப் போலே அடையவேண்டும் என்று புகழ்ந்தார் பாரதி.  அவரை அடியொற்றிப் பாரதி கவிதை வடிவத்தையும் மாற்றினார்.  காட்சிகளில் பாரதி சொல்வதைப்போல் பழைய தலையணை அதிலுள்ள பஞ்சை எடுத்துப் புதிய மெத்தையிலே போடு. மேலுறையைக் கந்தையென்று வெளியே எறி.  அந்த வடிவம் அழிந்துவிட்டது.  என்றான்.  பழைய வடிவம் அழிந்து பாரதியால் புதுக்கவிதை எனும் புதிய வடிவம் தமிழுக்கு வந்தது.  எல்லாம் அறிந்தும் பணிவோடு
    நல்லது தீயது நாமறிவோம் அன்னை
    நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக
எனக் கூறும் பாரதி தாகூரை விட உன்னதக் கவிஞன்தான்.    

திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரித் தமிழ்த்துறை நடத்திய தேசியக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை. ஆய்வுக்கோவை : பக்.254 – 258.

புலரும் புதுயுகத் தமிழ் பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்

புலரும் புதுயுகத் தமிழ்

பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.

ஆய்வின்முன்னுரை
    “தகுதி உள்ளதே தப்பிப் பிழைக்கும்“ என்ற டார்வீனின் விலங்கியல் கோட்பாட்டின்படி, மனிதன் தப்பிப் பிழைப்பதன் காரணம், காலத்துக்கேற்பத் தன்னை மாற்றி நவீனமயமாக்கித் தற்காத்துக் கொண்டதுதான்.  பன்னீராயிரம் ஆண்டு இலக்கிய, இலக்கண வரலாறு பெற்றது தமிழ்.  உலக நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ, கிரேக்கம், எபிரேயம், இலத்தீன், சீனம், அரபு ஆகிய மொழிகளோடு தமிழையும் செவ்வியல் மொழியாக ஏற்று அதன் தொன்மை, வரி வடிவம் ஆகியவற்றை ஆராய முற்பட்டது என அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா குறிப்பிடுகிறார்.  தொன்மையும் உண்மையும் மென்மையும் கொண்ட தமிழ் கணினி யுகத்தில் புதுயுகத் தமிழாக உருப்பெற்று வரும் இக்காலத்தில் தமிழ், கற்பித்தல், கற்றல் குறித்த கருத்துக்களை இக்கட்டுரை முன் வைக்கிறது.
நவீனப் பார்வை
    தேமதுரத் தமிழோசை இணையமெலாம் ஒலித்திடும், புது யுகத்தில் தமிழ் கற்பித்தலும் கற்றலும் உருமாறுவது தவிர்க்க முடியாது.  தொலைக்காட்சிப் பெட்டி இன்று எவ்வாறு மனித சமுதாயத்தை ஆட்டிப் படைக்கிறதோ அதேபோல் இணைய ஊடகமும் ஆட்டிப் படைக்கத் தொடங்கி உள்ளது.  தட்டச்சுப் பலகை மூலம் தேடு பொறிகளுக்குக் கட்டளை இட்டால் விரல் நுனியில் மலைபோல் தரவுகளைத் தொகுத்து அளிக்கும் நிலையில், வகுப்பறை வாசித்தல்களும், அருஞ்சொற்பொருள் விளக்கங்களும், பொழிப்புரை, பதவுரை கூறுதலும் நாளை பொருளற்றுப் போகக்கூடும்.  அப்போது வரும் மாணாக்கர் கூட்டம் மிதமிஞ்சிய அறிவுக் களஞ்சியமாகத் திகழக் கூடும்.  ஓர் ஆசிரியர் உலகின் ஒரு கோடி இணைய மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் வகுப்பெடுக்கக் கூடும்.
தமிழியல் நாளை.....?
1.    “தமிழ் மொழியாம் தாய்மொழியைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் எல்.கே.ஜி. முதல் எம்.பி.பி.எஸ் வரை பயின்று விடலாம்“ என்ற கொடுமையான நிலை மாற வேண்டும்.  தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி, தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி என்று எந்தக் கல்வியாக இருந்தாலும் தமிழ் பயில்வது கட்டாயமாக்கப்பட வேண்டும்.  ஒரே தமிழாக இல்லாமல், அந்தந்தத் துறைகளுக்கேற்ற பயன்படு தமிழாக அக்கல்வி வடிவமைக்கப்பட வேண்டும்.
2.    கல்லூரிகளில் பகுதி – 1 என்று தமிழ் இருந்தாலும், அந்த மதிப்பெண்கள் பட்டம் வழங்கும் போது தர மதிப்பீடுகளுக்கு ஏற்கப்படாததால், மாணவர்களுக்கு அது பொழுதுபோக்கும் வேடிக்கை வகுப்பாகவே தற்சமயம் அமைகிறது.  இந்நிலை எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்பட்டு, அந்த மதிப்பெண்களும் தர மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட வெண்டும்.
3.    படித்தலையும் தேர்வு எழுதுதலையும் மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொள்ளாமல், மாணவர்களைப் படைப்பாளிகளாக்கும் வகையில் நவீன முறையில் தமிழ்ப்பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
4.    வகுப்பறை சார்ந்துமட்டும் அமையாமல் பண்பாடு, மக்கள் வாழ்வியல் சார்ந்த கள ஆய்வுகள், பங்கேற்றல் அனுபவங்களைத் தரும் வகையில் பாடங்கள் அமைதல் வேண்டும்.
5.    பி.ஏ.(தமிழ்), எம்.ஏ (தமிழ்) போன்ற இலக்கியம் சார்ந்த பாடங்களோடு இணையப் பயன்பாட்டுத்தமிழ், மக்கள் தொடர்பு ஊடகத் தமிழ், கலைச்சொல் உருவாக்கத்தமிழ், இதழியல்மொழிசார்ந்த தமிழ் போன்றவற்றைத் தற்போதுள்ள நிலையைவிட இன்னும் மேம்பட்ட நிலையில் அளித்தால் தமிழ் கற்போர் ஆர்வம் மேம்படும்.
6.    சங்க இலக்கியங்களைப் பொருள் சொல்லி விளக்குவதோடன்றி, நவீனத் துறைகளான அழகியல், அமைப்பியல், உளவியல், சமூகவியல் போன்றவற்றின் அடித்தளத்தோடு நவீனக் கோட்பாட்டு முறையில் இன்னும் சிறப்பாக நடத்தலாம்.
7.    பல்கலைக்கழகங்களில் உரைநடைக்கான, கவிதைகளுக்கான, சிறுகதைகளுக்கான, புதினங்களுக்கான, கடிதஇலக்கியங்களுக்கான தனித்தனித் துறைகள் ஏற்படுத்தப்பட்டு நவீனக் கோட்பாட்டு ஆய்வுகள் பயன் மிகுந்த முறையில் நிகழ்த்தப்பட வேண்டும்.
8.    இளநிலை படிக்கும் மாணவ மாணவியரைக் கள ஆய்வில் ஈடுபடவைத்து, அந்தந்த வட்டாரம் சார்ந்த வட்டார வழக்குச் சொல் அகராதிகளைத் தொகுத்து இணையத்தில் அவற்றை சேமிக்க வகை செய்ய வேண்டும்.  பிங்கல நிகண்டு, திவாகர நிகண்டு என்று நாம் அறிந்தவற்றின் அடிப்படையில் சொற்கள் வகை தொகை செய்யப்பட வேண்டும்.
9.    அயற்புலம் சார் தமிழர்களை முன்நிறுத்திப் பல்கலைக்கழகங்களில் புலம்பெயர் தமிழ்ப் படைப்பாளர்களின் படைப்பிலக்கியங்களுக்காகத் தனித்துறைகளை அமைக்கப் பெற்று, அவர்களின் நேரடி அனுபவங்களைப் பெற்று அவ்விலக்கியங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
தமிழ் இணையத் துறை
    ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் இணையத் தமிழுக்கென ஒரு தனித்துறை உருவாக்கப்பட வேண்டும்.  எல்லாக் கல்லூரி மாணவர்களுக்கும் கணினிப் பயிற்சி அளிப்பதோடு, ஒவ்வொரு மாணவனுக்கும் குறிப்பிட்ட பக்கவரையறை தந்து e-format எனும் மின்னணு வடிவத்தில் தமிழ்ப் படைப்பிலக்கியங்கள் அனைத்தையும் இணையத்தில் சென்று சேர்க்க ஆவன செய்ய வேண்டும்.  சில இணைய அன்பர்கள் இத்தொண்டினை எவ்விதப் பலனும் பாராமல் தற்போது செய்து வருகிறார்கள்.  சங்க இலக்கியமும், நீதி நூல்களும், பக்தி இலக்கியங்களும், சிற்றிலக்கியங்களும், நவீன படைப்பிலக்கியங்களும் இணையப்பக்கங்களில் சேமிக்கப்படும்போது கற்பித்தல் எளிமையாகிறது.
ஒலி சார்ந்து கற்பித்தல்
    தமிழ் இலக்கியத்தைக் கற்றுத்தருவது இன்றைய சூழ்நிலையில் எழுத்துக்களைச் சார்ந்தும், சொற்களைச் சார்ந்தும் அமைகிறது.  தமிழ் இலக்கியங்களை ஒலிசார்ந்து கற்றுத் தருவதற்காக ஒவ்வொரு கல்லூரியிலும் “மொழி ஆய்வகம்“ ஏற்படுத்தப்பட்டுத் தமிழின் நுட்பமான தனித்துவம் எதிர்காலத்திலும் நிறுவப்பட வேண்டும்.  லகர, ளகர, ழகர வேறுபாடுகள் சார்ந்த இனிமை போன்றவற்றை மொழிஆய்வகம் மூலம் எதிர்காலத்தில் மிக நுட்பமாகக் கற்றுத்தரலாம்.
சுவடிகள் பாதுகாப்பு
    பள்ளி, கல்லூரித் தமிழாசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவ மாணவியரைக் கொண்டு அவரவர்ப் பகுதியில் கிடைக்கும் அரிய ஓலை சுவடிகளைத் தேடி எடுத்துப் பாடம் செய்து பல்கலைக்கழகங்கள் மூலம் பதிப்பிக்க வேண்டும்.  உ.வே.சா. செய்த உன்னதமான பணியை இன்று தமிழ்ப்பேராசிரியர்கள் செய்வது காலத்தின் கட்டாயம்.  அச்சுவடிகள் கணினி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டுக் குறுந்தகட்டில் பத்திரப்படுத்தப்பட்டால் நாளைய தலைமுறை அவற்றை ஆராய முடியும்.  மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் ஓராண்டுக்கு முன் ஆற்றிய உரையில், “உலகின் உன்னதமான திருக்குறள் மூலச் சுவடிகளை நாம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.  உடனடியாக அதைக் கண்டறிவது அவசியம்“ எனக் குறிப்பிட்டார்.  கண்டுபிடிக்கப்படாத சுவடிகளில் தமிழின் நாட்டார் பாடல்கள், சிற்றிலக்கியங்கள், சங்க இலக்கியச் செய்யுள்கள் இன்னும் பல தமிழகத்தின் கிராம, நகரப் பகுதிகளில் இருட்டறைகளில் மறைந்து கிடக்கின்றன.  அவற்றை எடுத்துப் பத்திரப்படுத்தி எதிர்கால ஊடகங்கள் மூலம் அடுத்த தலைமுறைக்குத் தர வேண்டும்.
கல்வெட்டுப் பதிவுகள்
    தமிழ், எழுத்துகளோடு மட்டும் தொடர்புடைய மொழியன்று.  பண்பாட்டோடு தொடர்புடைய மொழி.  உலகின் முதல் மனிதன் தோன்றியதாகக் கருதப்படும் லெமூரியாக் கண்டத்தை ஆழ்கடல் ஆய்வுக்கு உட்படுத்தும் முயற்சி வரும்காலத்தில் முக்கியமானதாகக் கருத வேண்டும்.  திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஸ்ரீ வைகுண்டம் பகுதி சார்ந்த ஆதிச்ச நல்லூரில் முதுமக்கள்தாழிகள் கிடைத்துப் பல திருப்பங்களை உண்டாக்கியது.  எதிர்காலங்களில் தமிழ் மாணவர்களுக்குத் தொல்லியல், மானுடவியல் அணுகுமுறைகள் வெவ்வேறு முறைகளில் கற்றுத் தரப்பட்டுத் தொல்லியல் சான்றுகளை ஆராயும் தன்மையைத் தர வேண்டும்.
    கல்வெட்டு எழுத்துகளைக் கணினி மூலம் பட முறையால் விளக்கி அப்படிப்பைத் தமிழ் மாணவர்களுக்குக் கட்டாயமாக்க வேண்டும்.  மாதம் ஒரு முறை மாணவர்களைக் கல்வெட்டு தொடர்பான கள ஆய்வுகளுக்கு அனுப்புவதன் மூலம் அரிய கல்வெட்டுகளை நம்மால் அறிந்து பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குத் தர முடியும்.
ஆய்வு முடிவுரை
    மொழி நவீனமாகும் போது, பண்பாடு எழுச்சி அடைகிறது.  தமிழ் என்றால் இனிமை என்பதோடு, இனி அனைத்தும் உள்ளடக்கிய நவீனப் புதுமை என்ற பொருள் புனையப்படட்டும்.  கல்தோன்றி மண் தோன்றிய கதையைச் சொல்லி மட்டுமே எதிர்காலத்தில் காலம் தள்ளவிட முடியாது.  காகிதமில்லாப் புத்தகங்களிலும், தமிழ் நவீன மின்னணு அங்கியோடு இணைய ஆட்சி செய்யும்.  அன்று கணினி முன் எல்லாரும் கம்பராமாயணத்தைப் படக் காட்சிகளோடு ஒலி, வரி வடிவில் கற்பார்கள்.
    அன்று வீடுகளே வகுப்பறையாகும்.  காஞ்சி நகர்ப் புலவன் பேசும் உரைதனைக் கனடாத் தமிழன் நேரடி இணைப்பில் நிறைவாகப் படிப்பான்.  கற்போரெல்லாம் கவிதை எழுதுவர்:  மாணாக்கர் மனிதம் பேணுவர்.  கலாநிதி கைலாசபதி போன்று, ரசிகமணி போன்று, வண்ணதாசன், கலாப்பிரியா போன்று, விக்ரமாதித்யன் போன்று, நா. வானமாமலை, வையாபுரிப் பிள்ளை போன்று புதிய நோக்கிலும் போக்கிலும் தமிழ் மாணவன் வீறு கொண்டு எழுவான்.
    எதிர்காலத்தில் தமிழ்த் துறையின் துணையாக ஆயிரமாயிரம் புதிய துறைகள் புலரும்.  இலக்கணக் குறிப்பு கற்பது மட்டுமே தமிழ்க்கல்வி என்ற நிலை மாறி, இணையப் பூங்குன்றனார்கள் “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என்று புதிய பூபாளம் இசைப்பர்.  அன்று உலகத் தமிழரெல்லாம் நவயுகத்தமிழைத் தமிழ் விடு தூது விட்டுப் போற்றி மகிழ்வர்.
ஓங்கலிடை வந்(து) உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்“
தமிழால் இன்றும், என்றும் நவீனமாக நவயுகம் படைக்க முடியும்.  எதிர்காலத்தில் உலக மொழிகளெல்லாம் தமிழின் தனிச்சிறப்பை மொழிபெயர்த்துத்தரும்.

சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய “தமிழியலின் எதிர்காலவியல்“ பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்

Thursday, January 10, 2013

எதிர்காலத் தமிழ் எவ்வாறு அமையும் பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்

      எதிர்காலத் தமிழ் எவ்வாறு அமையும்

பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.

ஆய்வு முன்னுரை
    மாற்றமடையாத எதுவும் இந்த உலகில் தப்பிப்பிழைப்பது இல்லை.  ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் தமிழ்மொழியிலும், தமிழிலக்கியத்திலும், எதிர்காலத்தில் நடைபெற வேண்டும் என்பதை முன்னிறுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.
எழுத்துச் சீர்திருத்தம்
    26 எழுத்துகளைக் கொண்டு எளிமையாய் அமையும் ஆங்கிலமொழி போல், தமிழ் எழுத்துகள் சீர்த்திருத்தப்பட்டு தமிழின் வரிவடிவம் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.  “இன்று 247 தமிழ் எழுத்துகளையும் கணினிப் பயன்பாட்டில் 107 குறியீடுகளைக் கொண்டு எழுதுகிறோம்“.  என மலைக்கிறார் அறிவியல் தமிழ் அறிஞர் முனைவர் வா.செ. குழந்தைசாமி.  தமிழைத் தாய்மொழியாய் கொண்டிராத பிற நாட்டவரும் எளிமையாய் தமிழ் படிக்க எதிர்கால எழுத்துச் சீர்திருத்தம் அமையும்.  கணினியை இன்னும் எளிமையாகப் பயன்படுத்த வாய்ப்பாக அமையும்.  
பேச்சு வழக்கு பற்றிய ஆய்வுகள்
    இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள் நடைபெற்ற அளவுக்கு, வட்டாரப்பேச்சு வழக்கு பற்றிய ஆய்வுகள் நடைபெறவில்லை.  திருநெல்வேலித் தமிழுக்கும், சென்னைத் தமிழுக்குமான ஒப்பியல் ஆய்வுகள், வட்டார வழக்குச் சொல்லகராதி தொடர்பான ஆய்வுகள் தமிழகத்திற்குள் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் நடத்தப்பட்டு இணையத்தில் அந்தந்த மக்களின் குரலில் பதிவாக்கப்படவேண்டும்.
கல்வெட்டுப்பதிவுகள் இணையத்தில் ஆவணமாக்கப்பட வேண்டும்
    ஆய்வறிஞர் திரு. ஐராவதம் திரு. மகாதேவன், நாகசாமி போன்றோரின் கல்வெட்டாய்வுகளைப் போன்று பல்கலைக்கழகங்கள் தங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரிய கல்வெட்டுகளைப் படங்களாக எடுத்து, இணையத்தில் ஆவணமாக்கினால் உலகளாவிய அளவில் ஆய்வுகளை நிகழ்த்தலாம்.  “2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய கல்வெட்டுகள் இந்தியாவில் உள்ளன.  அதில் 90% தமிழ்நாட்டில் உள்ளன.  திருநெல்வேலி மாவட்டம் மறுகால் தலையில் அதிக செய்திகளைக் கூறும் கல்வெட்டு உள்ளது.
நாடு முழுக்கத்தமிழ்க் கல்வி
பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் 2001 – 2002 அறிக்கைப்படி இந்தியாவில் 213 பல்கலைக்கழகங்களும் 16,000 கல்லூரிகளும் உள்ளன.  அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழியற் புலங்கள் உருவாக்கப்பட்டு கற்பித்தலும் ஆய்வுகளும் நடைபெற வேண்டும்.
திருக்குறள் உலக இலக்கியமாய் அறிவிக்கப்பட வேண்டும்
    உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலக இலக்கியமாய் ஐ.நா. சபை மூலம் அறிவிக்க வைப்பதும், உலகின் அனைத்து மக்களுக்கும் அவரவர் மொழியில் திருக்குறளைக் கொண்டு செல்ல வேண்டும்.
கணினித்தமிழ் – இணையத்தமிழ்
    தமிழ் மட்டுமே அறிந்த ஒருவர் எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் மென்பொருட்கள் உருவாக்கப்படவேண்டும்.  தமிழ் இணையப் பல்கலைக்கழகம் www.tamilvu.org.’ எனும் வலைத்தள முகவரியில் இட்டு, அழகான மின்நூலகத்தை அமைத்து, இணையக் கல்வியை 54 நாடுகளிலுள்ள 5000 தமிழ் மாணவர்களுக்கு அளித்து வருகிறது.  இணையத்தமிழை முதுநிலைப் பாடமாக்கி, கணினியோடு இணைந்தகல்வி உருவாக்கப்பட வேண்டும்.    
டிஸ்கி, டாப், டாம், யூனிகோடு எனும் நால்வகை எழுத்துருவாக்கத்தினை உலகத்தமிழர்கள் கணினியில் பயன்படுத்துகின்றனர்.  ஒவ்வொருவரும் வெவ்வேறு எழுத்துருவாக்கத்தினைப் பயன்படுத்துவதால், சில இணையப் பக்கங்களை நம்மால் வாசிக்க முடியாமல் போகிறது.  உலகம் முழுக்க “யூனிகோடு“ முறையைத்தான் மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.  தமிழ்க்கணினிகள் யாவற்றிலும் விதவிதமான உள்ளிடல்கள் நிறுத்தப்பட்டு, எதிர்காலத்தில் ஒரேமாதிரியான உள்ளிடல்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.  “எந்த எழுத்துரு இருந்தாலும் யூனிகோடுக்கு அதை மாற்றும் எந்திரம் கண்டறியப்பட வேண்டும்“ என்ற அறிவியல் தமிழறிஞர் சுஜாதாவின் கருத்து நோக்கத்துக்கது.  அதோடு அவர் கூறும் மற்றொரு கருத்து “இணையத்தில் கோப்புகளை அனுப்ப இன்று 26 முறைகள் உள்ளன.  4 விசைப்பலகை ஒதுக்கீடு உள்ளன.  ஒரே ஒரு விசைப்பலகை ஒதுக்கீடு, ஒரே ஒரு குறியீடு என்பது எதிர்காலத்தில் பாமர மக்களுக்கும் கொண்டு செல்ல உதவும்“ என்பதாக அமைகிறது.
புதிய நோக்கில் தமிழ் ஆய்வுகள்
    உலகில் தமிழியற்புலங்கள் உள்ள அனைத்துப்பல்கலைக்கழக நூலகங்களும் இணையம் வழியே தொடர் இணைவு செய்யப்பட்டால், “மின்னணு நூலகம் உருவாக்கப்பட்டு ஆய்வுகள் சிறப்பாக நடைபெறும்.  அனைத்துப் பல்கலைக்கழக ஆய்வு நூலடைவுகளும் இணையத்தில் இடப்படுவதன் மூலம், திரும்பத் திரும்ப ஒரே துறையில் நடைபெறும் ஆய்வுகள் குறையும்.  லெமூரியாக்கண்டம், பூம்புகார் ஆகியன கொற்கை தொடர்பான கள ஆய்வுகள் ஊக்குவிக்கப்படுட வேண்டும்.
புதிய நோக்கில் தமிழ் இலக்கியம் பயிலலாம்
    தமிழ் இலக்கியப் படைப்புக்களின் நோக்கும் போக்கும் எதிர்காலத்தில் மாற்றம் பெறும்.  இயந்திர யுகத்தில் கவிதை, சிறுகதை, உரை நடை இன்னும் சொற்சுருக்கம் பெறும்; மண்மரபு சார்ந்த பதிவுகள், ஏழைமக்களின் அவலங்களே இனி கவிதை முழுக்க இடம் பிடிக்கும்.  நவீன இரட்டைக்காப்பியங்களாய் வைரமுத்துவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கருவாச்சி காவியமும், கள்ளிக்காட்டு இதிகாசமுமே இதற்குச் சாட்சி, தமிழ்க் கவிதைகள் மொழிபெயர்ப்பின் மூலம் உலகத்தின் பார்வைக்குள்ளாகி நோபல் பரிசுகளும் பெறவாய்ப்பாகும்.  சிறுகதைகளின் வடிவம் இன்னும் சுருங்கும்.  புதிய பாடுபொருட்களால் நாளைய இளம் படைப்பாளிகள் புதுமைப்பித்தனையும், கு.ப. ரர்வையும், மௌனியையும், சரியாக உள்வாங்க தாண்ட முயல்வார்கள்  தமிழ் வகுப்பறைகளில் மாணவர்களே, படைப்பாளிகளாகவும் திறனாய்வாளர்களாகவும் திகழ்வார்கள்.  தமிழ்மொழி, ஆய்வகங்கள் மூலம் இன்னும் நவீன உத்திகளோடு ஒலி வடிவிலும், ஒளி வடிவிலும் கற்றுத்தரப்படும்.  சிலப்பதிகாரம் இசைப்பண்ணாகவே மாற்றப்பட்டு இசை நுணுக்கங்களோடு கற்றுத்தரப்படலாம். விரிவுரைகளும் அருஞ்சொற்பொருள் விளக்கங்களும் பொருளற்றுப் போகலாம்.  சங்கஇலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை அனைத்து இலக்கிய வகைமையும் மறுவாசிப்பிற்குள்ளாகி இன்னும் ஆழமாகப் புரியப்படலாம்.  தமிழ்த்துறை – வணிகம், பொருளாதாரம், மானுடவியல், இயற்பியல், புவியியல், வானியல், மண்ணியல் போன்ற பல்துறைகளோடு இணைந்த பல்துறையாக மாறி அதிலிருந்து புதிய துறைகள் உருவாகலாம்.  உ.வே.சா. அழிந்து கொண்டிருந்த நூல்களைத் தேடிப்பிடித்து பல ஓலைச்சுவடிகளை ஒப்பு நோக்கிப் பாடபேதம் கண்டு அடிக்குறிப்போடு பல இலக்கியங்களை அச்சிட்டு வெளியிட்டார்.  அதன்பின் சுவடிகளை ஒப்புநோக்கி ஆய்தல் குறைந்து போனது.  எதிர்காலத்தில் இந்நிலை மாறவேண்டும்.  ஓலைச்சுவடிகள் யாவற்றையும் “ஸ்கேன்“ செய்து இணையத்தளத்தில் உலகம் முழுக்க உள்ளிடும் பணி நடந்தால் உலகளாவிய முன்முயற்சியாக அது அமையும்.  புதிய இலக்கியங்களின் மூல எழுத்துப்படி ஒவ்வொன்றும் இம்முறையில் ஆவணப்படுத்தப்பட்டால் எதிர்கால ஆய்வுகளுக்கு வழிகாட்டியாய் அமையும்.  படைப்பாளிகளின் வாழ்வியல் பதிவுகள் அவர்கள் வாழும்போதே செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டால், அவை அவர்களின் படைப்பில் வெளிப்பட்ட முறையை நம்மால் அறியமுடியும்.  எதிர்காலத்தில் வெளியாகும் அனைத்துப் படைப்புக்களோடும் அந்தப் படைப்பு பிறந்த சூழல் குறித்த “குறுந்தகட்டு ஒலிப்பதிவுடன் இணைந்து வெளியானால் வாசனால் படைப்பை முழுமையாய் உணர முடியும்.  நாளைய பல்கலைக்கழகத்துறைகளில் பேராசிரியர்களோடு படைப்பாளிகளும் இணைந்து பணிபுரிவார்கள்.  கரிசல் காட்டு எழுத்தாளர்
கி. ரா. புதுவைப் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்தியதைப் போன்ற சூழல் எங்கும் நிலவும்.
    எதிர்காலம் தமிழின் எழுச்சிக்காலமாய் அமையும்.  சொந்த மண்ணில் அந்நியப்படுத்தப்பட்ட மொழியாக இனி தமிழை யாரும் நினைக்க முடியாது போகும்.  தமிழ் ஆட்சிமொழியாக அனைத்துத்துறைகளிலும் திறம்படச்செயல்படும்.  புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இணையான தமிழ் உணர்வு தமிழகத்திலும் உருவாகும்.  தமிழ் நவீன ஊடகமான இணையத்திலும் சாதனை படைத்து உலகத்தோரால் பாராட்டப்பெறும்.  பேச்சுத்தமிழுக்கு இலக்கணம் வகுக்கப்படலாம், வேலைவாய்ப்புத் தரும் துறையாக மலரும்.  தொன்மையின் வேரில் தமிழ் எனும் கற்பகதரு நவீன கனிகளைத்தரும்.  மொழிபெயர்ப்புகள் நிறைய நடைபெற்று “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்“. நம் தேர்ந்த பண்பாடும், திராவிட நாகரிகமும் உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப் பெற்று பின்பற்றப்படும்.  தனித்தியங்கும் தன்மை தமிழனுக்கு உண்டு.  தமிழே ஞாலத்தில் முதுமொழி பண்டு என்ற பாவேந்தர் கூற்று அப்போது மெய்ப்பிக்கப்படும்.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழாய்வு மன்றம் நடத்திய “தமிழாய்வு கடந்த காலமும் வருங்காலமும்“ எனும் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை.  ஆய்வுக்கதிர் – 5, மெய்யப்பன் பதிப்பகம், பக்.102-107.

வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள் பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி

   வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள்

பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.

முன்னுரை
    தற்காலத் தமிழின் நவீன இலக்கியப் படைப்பாளிகளில் தனித்துவம் பெற்ற சிறுகதை.  கவிதை, இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்பவர் வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி.  1962ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவனாக எழுதத் தொடங்கிய வண்ணதாசன் தொடர்ந்து 48 ஆண்டுகளாக இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சிச் சிந்தனைகளைத் தந்து வருகிறார்.   
வண்ணதாசனும் இயற்கையும்
    சங்க இலக்கியங்கள் இயற்கையைக் கொண்டாடும் இலக்கியங்களாகத் திகழ்கின்றன.  தொல்காப்பியர் “குறிஞ்சி முதல் பாலை“ வரையிலான ஐந்திணைகளை “நடுவண் ஐந்திணை“ என்று அகத்திணையியலில், வரையறுத்து நிலத்தையும் பொழுதையும் முதற்பொருளாக்குகிறார்.  ஐவகை நிலங்களின் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை போன்றவற்றைக் கருப்பொருளாக்கியுள்ளார்.
    “தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
    செய்தி யாழினி பகுதியொடு
    அவ்வகை பிறவும் கருவென மொழிப்“1
தலைவன் தலைவி ஆகியோரின் மனவுணர்வினைக் கருப்பொருட்கள் மீது ஏற்றி, அவற்றின் பின்னணியில் பாத்திரங்களின் ஆழ்மனப்பதிவைச் சங்க இலக்கியங்கள் அழகாக விளக்கின.  இறையனாரின் குறுந்தொகைக் கவிதை
   
“கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
    காமம் செப்பாது, கண்டது மொழிமோ.
    பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்
    செறி எயிற்று, அரிவை கூந்தலின்
    நறியவும் உளவோ, நீ அறியும் பூவே“2
“மயில் போன்ற அழகான பற்களுடைய அப்பெண்ணின் கூந்தலை விட அதிக வாசனையுள்ள பூ உள்ளதா? என்ற தலைவனின் கேள்வி, அழகிய இறக்கை உடைய வண்டினை நோக்கியே அமைகிறது.  வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள் இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டு மானுட வளர்ச்சிச் சிந்தனையோடு அமைகின்றன.  நான் இயற்கையிடமிருந்து கற்றுக் கொண்டதெல்லாம் அதன் பிரமாண்டமும் மௌனமும் மட்டுமே3 என்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் கருத்து வண்ணதாசனுக்குப் பொருந்துகிறது.  கவிஞர் அறிவுமதியின் “கடைசி மழைத்துளி“ கவிதைத் தொகுதிக்கு வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரை சுற்றுச்சூழல் சார்ந்த அவரது கருத்தியலை முன்வைக்கிறது.  படைப்பாளியுடன் ஆய்வாளர்.  நிகழ்த்திய நேர் காணலில் “ரொம்பச் சமீபகாலக் கடிதங்களில்“ நான் என்னை ஒரு தாவரமாக உணர்கிறேன் என்றே பதிவு செய்துள்ளேன்“4 என்று வண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.
    கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனுஷா மனுஷா, கனிவு, நடுகை, உயரப்பறத்தல், கிருஷ்ணன் வைத்த வீடு, பெய்தலும் ஓய்தலும் ஒளியிலே தெரிவது ஆகிய பத்து சிறுகதைத் தொகுதிகளிலும் வண்ணதாசனின் இயற்கை சார்ந்த பதிவுகளாகவே அமைகின்றன.  வற்றாத ஜீவ நதி தாமிரபரணி, வெட்டப்படும் மரங்கள் அதிகாலைகளை அழகாக்கும் பூக்கள், வானில் சுதந்திரமாய் பறக்கும் பறவைகள், அடிக்கடிக் கனவில் வரும் யானைகள் இவைகளே வண்ணதாசன் சிறுகதைகளை அழகு செய்வன.
    “வெளியேற்றம்“ சிறுகதையில் வீட்டுவேலை செய்ய வந்த சிறுமி யாரோ அங்கிருந்த மரத்தை வெட்டுவதைக் கண்டு வருந்துகிறாள்.  அவளது துடிப்பை வண்ணதாசன், “இது வெட்டப்பட்டு முறிய முறிய அவளுக்குள் இருந்து பறவைகளின் சப்தம் “சலார்“ என்று ஒரே சமயத்தில் வேட்டுக்கு அதிர்ந்து இறக்கையடித்துப் புறப்பட்டு, ஆனால் முடியாமல் முட்டுவது போலத் தோன்றியது5 என்கிறார்.
    வண்ணார்பேட்டையில் தாமிரபரணியின் வட்டப் பாறையை, முங்கிப் படுத்திருக்கும் யானையின் முதுகோடு ஆசிரியர் ஒப்புமைப்படுத்துகிறார்.
    “யானை முங்கிப்படுத்திருப்பது மாதிரி வட்டப்பாறை இருந்தது6 தாத்தாவின் முகத்தை விளக்க
    “பசலிக்கொடி மாதிரி குளிர்ச்சியாக இருந்தது தாத்தா முகம்“7 என்றும் “டம்ளருக்குள் ஒரு புழுவைப்போலச் சேமியா கிடந்தது“8  சத்தமில்லாமல் ஓடுகிற நதியின் கரையில் நிற்கிற மாதிரி இரைச்சல் ஏதுமற்ற அலுவலகத்தில் நின்றான்9 என்று பல உவமைகளைக் கையாண்டுள்ளார்.   
    வண்ணதாசன் சிறுகதைகளைச் செறிவாக்கப் பயன்படுத்தும் உவமைகளில் இயற்கை சார்ந்த உவமைகள் (34 சதவீதம்) முதலிடம் பிடிப்பதாக இவ்வாய்வாளர் தம் முனைவர்; தம் முனைவர் பட்ட ஆய்வேட்டில் நிறுவியுள்ளார்.
    “சூரியன் அருகில் பறக்கிறவர்கள்“ கதையில் சூரியனுக்கு அருகே பறக்க ஆசைப்பட்டு எரிந்து போகிற “இக்காரஸ்“ எனும் கிரேக்கத் தொன்மத்தைப் படைத்துள்ளார்.
    தாமிரபரணி, வண்ணதாசன் சிறுகதைகளின் மையப் புள்ளியாகத் திகழ்கிறது.  “பெய்தலும் ஓய்தலும்“ கதைத் தொகுப்பிற்கு வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரையில் “நதியும் மணலற்றுப் போய்க் கொண்டிருக்கிறது.  இதுவரை அது தன் நீர்மையை மணலால் உச்சரித்துக் கொண்டு வந்தது. அள்ளப்பட்ட மணல், கலக்கிற சாயக் கழிவுகளில் மீன்கள் மூச்சுத் திணறுகின்றன.  நீந்துகிற மீன்களையல்ல, அதிகாலையில் இறந்து ஒதுங்கியிருக்கிற மீன்களைப் பற்றியே இந்தத் தினத்துக் கவிதை இருக்க முடியும்.“10  மண்ணள்ளும் அசுர எந்திரங்களால் மொட்டையடிக்கப்படும் தாமிரபரணியின் தற்கால நிலையைப் படைப்பாளி வேதனையோடு பதிவு செய்துள்ளார்.
    புறவுலகின் அதிர்வுகள் அவரது அக உலகை உலுக்கும்போது அதைப் படைப்பாக மாற்றுகிறார்.  1984 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின், நாட்டில் நடைபெற்ற இனக்கலவரத்தில் இறந்துபோனோரின் சடலங்களை ஒப்புமைப்படுத்துகிறார்.  “பெயர் தெரியாமல் ஒரு பறவை“ கதையில், பெயர் தெரியாமல் இறந்து கிடக்கும் பறவையை வண்ணதாசன் இவ்வாறு வர்ணிக்கிறார்.
    நாட்டில் நடைபெற்ற துயரமான சம்பவத்தைப் பறவையோடு இணைத்து வண்ணதாசன் சிறுகதையாகப் படைத்தார். “குழந்தைகளை மனிதர்களையெல்லாம் அடித்து இரவோடிரவாக இப்படி வாசல்களில் நிர்த்தாட்சண்யமின்றி எறிந்து போகிற சமீபத்திய இனக்கலவரங்கள் ஞாபகம் வந்தது.  வயலில் அகோரமாய்ச் செத்துக் கிடக்கிற கிழவி, வரிசையாக வயிறூதிக் கிடத்தப்பட்டிருக்கிற சிசுக்களின் வரிசையை அதிகப்படுத்தி ஒருத்தன் கைகளில் ஏந்திவருகிற இன்னொரு மல்லாந்த குழந்தையின் ஊதின வயிற்றுத் தொப்புழ், இறந்து கிடக்கிற தன் குழந்தையின் உடலைக்கண்டு, அதனருகே உட்கார்ந்து அழுகிற தகப்பனின் கிழிந்த முகம், அப்படிக் கிழிந்த நிலையில் ஒரு கைத்துப்போன சிரிப்புப் போலப் புகைப்படத்தில் பதிவாயிருப்பது எல்லாம் கலந்து அந்த ஒற்றைப் பறவையாகக் குப்புறக் கிடந்தது11  
கல்யாண்ஜி கவிதைகளில் “இயற்கை“ சித்திரிப்பு
    திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளி மாணவராகப் பயின்றபோது சீட்டுக்கவிகள் எழுதிய டி.எஸ். கல்யாண சுந்தரம் என்கிற வண்ணதாசன், கவிதைகளை கல்யாண்ஜி எனும் புனைப்பெயரில் எழுதியுள்ளார்.  மொழியின் சுருக்கெழுத்தாகக் கல்யாண்ஜி கவிதைகள் படைக்கிறார்.
    “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
    வளம் புதிது, சொற் புதிது, சோதிமிக்க
    நவகவிதை“12
என்று கவிதைக்குப் பாரதி வகுத்த இலக்கணம் கல்யாண்ஜி கவிதைகளுக்குப் பொருந்துகிறது.
    கல்யாண்ஜியின் கவிதைகள் ஆழமான சிந்தனைத்தளத்தில் சொற்சித்திரங்களாகக் கட்டமைப்பட்டுள்ளன.  அழகியல் தன்மை மிகுந்தனவாக, இயற்கையைக் கொண்டாடும் தன்மையுடையனவாக அமைகின்றன.  தாமிரபரணி மண்ணை விட்டுப் பிரிந்த பிரிவின் வருத்தமும், இயற்கை மீதான தாக்குதல் குறித்த வருத்தமும் அவரது கவிதைகளில் பதிவாகியுள்ளன.
    செப்பறைத் தேரிலும்
    படியும்
    சிமெண்ட் ஆலைப்புழுதி“13
என்று எழுதும் கல்யாண்ஜி, சிமெண்ட் ஆலையால் திருநெல்வேலி படும் பாட்டினைப் பதிவு செய்துள்ளார்.  இயற்கையின் மீது கல்யாண்ஜி தொடக்ககாலம் முதலே பாசம் கொண்டிருந்தார்.  அது காலப்போக்கில் வளர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அக்கறையாக மாறியது.  வண்ணதாசன் 1966ஆம் ஆண்டு வ.உ.சி. கல்லூரியின் வணிகவியல் மாணவராகப் பயின்றபோது எழுதிய “அந்தி மனம்“ எனும் இயற்கை சார்ந்த கவிதையை ஆய்வாளர் தன் ஆய்வேட்டில் பதிவு செய்துள்ளார்.
    “அழகுக் கவிதை செய அட்சரங்கள் கோர்த்தது போல்
    அந்திக் கரைவானில் அஞ்சனத்தைக் குழம்பாக்கி
    அள்ளிப் பரப்பி அங்கிங்கே விட்டெறிந்து
    புள்ளி சேர்த்துப் புனைகின்ற கோலமென
    வெள்ளிப் பிழம்பாய் வீசுகதிர் பாய்ந்துவரக்
    கொள்ளி நுனியாகக் குருதிச் சிவப்பாக
    பள்ளிச் சிறுபையன் பட்ட பிரம்படியால்
    உள்ளங்கைச் செம்மை உருவேற்கும் ஒன்றாக
    வானம் இருந்ததுகான்! வார்ப்பழகு கொண்டதுகான்!
    மோனத்துள் நான், அழகில் மூழ்கியது பித்து மனம்!“14
அறுபதுகள் முதலே கல்யாண்ஜி அழகியல் கவிஞராக இயற்கைக் கவிஞராகத் திகழ்ந்ததை அறிய முடிகிறது.  புலரி, கல்யாண்ஜி கவிதைகள், முன்பின், அந்நியமற்ற நதி, நிலா பார்த்தல், உறக்கமற்ற மழைத்துளி, கல்யாண்ஜி தேர்ந்தெடுத்த கவிதைகள், இன்னொரு கேலிச் சித்திரம் ஆகிய கல்யாண்ஜியின் எட்டுத் தொகுதிகளிலும் இயற்கை சார்ந்த அவரது மானுட வளர்ச்சிச் சிந்தனைகளைக் காணமுடிகிறது.

“நேரடி வானத்தில்
    தெரிவதை விடவும்   
    நிலா அழகாக இருப்பது
    கிளைகளின் இடையில்“15
என்று நிலாவைக் கவிஞர் வர்ணிக்கிறார்
    மார்கழி மாத அதிகாலையில் போனால்
    பீர்க்கம் பூக்களையும் நட்சத்திரங்களையும்
    நாமே எட்டிப் பறித்துக் கொள்ளலாம்.“16

கல்ணாஜி கவிதைகளில் இடம்பெறும் பூக்கள் நிறத்தாலும் மணத்தாலும் தோற்றத்தாலும் உள்ளார்ந்த ஒரு செய்தியைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.  தமிழர் பண்பாட்டில் அகவாழ்விலும் புறவாழ்விலும் பூக்களே நிறைந்திருக்கின்றன.  போர்ச் செய்திகளை அறிவிக்கும் ஊடகமாக வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, ஊழிஞை, நொச்சி போன்ற மலர்களைச் சங்க இலக்கியம் சொல்கிறது.  அகப்பாடல்களிலும் பூக்கள் உள்ளுறையும் செய்திகளோடு அழகியல் நோக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.  கல்யாண்ஜி கவிதைகள் குறித்து வல்லிக்கண்ணன் கருத்து தெரிவிக்கும்போது,  தொடர்பே இல்லாத பல விஷயங்களைத் தொகுத்து வாழ்க்கையின் யதார்த்தத்தை சித்திரிக்கிற முயற்சிகளாக அவை உள்ளன.  மனசின் அலை பாய்தல்களாக அழகுடன் சிதறிக் சிரிக்கும் சொற்சித்திரங்களாகப் பல கவிதைகள் விளங்குகின்றன. சொற்சித்திரங்களாக சிறுகவிதைகள் மிளிர்கின்றன.  அவை எல்லாமே அழகை நேசிக்கிற, அன்பை ஆராதிக்கிற, மனிதத்தை மதிக்கிற மென்மையான உள்ளத்தின் இனிய உணர்வு வெளிப்பாடுகளாகும்.“17
முடிவுரை
    இலக்கியம் வாழ்க்கையின் கண்ணாடியாக அமைகிறது.  ஓர் உயர்ந்த இலக்கை நோக்கி மனிதனை அழைத்துச் செல்கிறது.  மானுட வளர்ச்சிக்கான மதிப்பீடுகளைக் காலந்தோறும் வழங்கிக் கொண்டே இருக்கிறது.  “நான் எல்லோரையும் ஏற்றுக்கொள்கிறேன்.  அவரவரின் பலங்களோடும் பலவீனங்களோடும்“ என்று கூறும் வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள் அன்பிலக்கியங்களாக அமைகின்றன  இயற்கையைப் போற்றுதலே மானுட வளர்ச்சியின் முதல்படி என்ற கருத்தியலை வலியுறுத்துகின்றன.  யாவற்றையும் இரசிக்கக் கற்றுத் தருகின்றன.  கல்யாண்ஜியின் கவிதைகளில் வண்ணதாசனின் கதைகூறும் தன்மையும், வண்ணதாசன் சிறுகதைகளில் கல்யாண்ஜியின் கவிதைத் தன்மையையும் நம்மால் உணர முடிகிறது.

மரங்களை அவர் நேசித்தார்,

“பென்சில் சீவிக் கொண்டிருந்தேன்
மொரமொரவென
மரங்கள் எங்கோ சரிய“18
“கூடுமானவரை இயற்கை மனிதர்களைப் பத்திரமான இடத்தில்தான் வைக்கிறது.  நாம் எவ்வளவுதான் அவற்றைப் பத்திரக் குறைவான இடத்துக்குக் கொண்டு போனாலும்“19 என்கிறார் வண்ணதாசன் இயற்கையைப் பாதுகாக்கத் துடிக்கும் உயர்ந்த சிந்தனையே வண்ணதாசனின் மானுட வளர்ச்சிச் சிந்தனை.
குறிப்புகள்
1.    தொல்காப்பியர், தொல்காப்பியம், பொருள். 20.
2.    குறுந்தொகை, பா.2.
3.    எஸ். ராமகிருஷ்ணன், கதாவிலாசம், ப.105.
4.    ச. மகாதேவன், வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள், முனைவர் பட்ட ஆய்வேடு, பி.இ.ப.19.
5.    வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், ப.344.
6.    மேலது. ப.953.
7.    மேலது. ப.918.
8.    மேலது. ப.250.
9.    மேலது. ப.181.
10.    வண்ணதாசன், பெய்தலும் ஓய்தலும், ப.7.
11.    வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், ப.358.
12.    பாரதியார், பாரதியார் கவிதைகள், ப.28.
13.    அறிவுமதி, க