Saturday, May 24, 2014

ஆற்றுச்சமவெளிகளில்தான் நாகரிகங்கள் தோன்றின



ஆற்றுச்சமவெளிகளில்தான் நாகரிகங்கள் தோன்றின .தண் பொருநை நதியாய் பொதிகை மலையில் உருப் பெற்று ,நெல்வேலி முழுக்க ஓடி வற்றா வளம் சேர்க்கும் தாமிர பரணி நதியோரம் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பழமையான தண் பொருநை நாகரிகம் தோன்றியது .வான் முட்டும் பொதிகை மலை,அதில் முகில் எட்டும் பாண தீர்த்தப் பே ருவி ,அணையை நிறைத்து ,பாபநாச மலையில் இருந்து கம்பீரமாய் இறங்குகிறாள் தாமிரபரணி எனும் தண்ணீர்த் தாய் .அம்பாசமுத்திரம் ,கல்லிடைக் குறிச்சி ,வழியே கம்பீரமாய் நடந்து வருகிறாள் தண் பொருநைத் தாய் .

குந்தியின் மகனே! மோட்சத்தை அடையக் கடுந்தவம் புரிந்த முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்த தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்'என்று ஒரு முனிவர் தர்ம புத்திரனைப் பார்த்துத்  தாமிரபரணியின் பெருமையைச் சொல்கிறார் .கங்கைப் போல் புனித நதியாகத் தாமிரபரணி போற்றப் படுகிறது .

இறையனார் சிவபெருமானின் திருமணத்திற்காகத்  தென்புலம் தாழ்ந்து வடபுலம் உயர்ந்தபோது சமன் செய்ய அகத்திய மாமுனிவர் வந்த பாபநாசத்தலத்தில்தான்   தாமிரபரணி நதிக் கரையில் ஈசன் அவருக்கு தன் திருமணக் கோலத்தைக் காட்டியதாகப்   புராணச் செய்தி உள்ளது .
காளிதசருடைய ரகு வம்சம் எனும் காவியத்திலும் தாமிரபரணிகுறித்த பதிவு உள்ளது .
வட மொழியில் அமைந்த வான் மீகி இராமாயணத்தில் தாமிரபரணி நதி குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன .
பொதிகை மலையில் உருப் பெற்று வங்காள விரிகுடாக் கடலில் புன்னைக் காயல் எனும் இடத்தில் கடலோடு சங்கமமாகும் தாமிரபரணி நதியில் குற்றாலத்தில் உருப் பெற்று அருவியாய்  கொட்டித் தாமிர பரணியோடு இணையும் சிற்றாறும் கால்டுவெல் பாதிரியாரால் புகழப்பட்ட நதி  .இவ்விரண்டு நதியோடு வான் உலகிலிருந்து பாயும் சரஸ்வதி எனும் நதியும்  தாமிரபரணி நதிஉடன் கலக்கும் இடம் சீவலப்பேரி .திரிவேணி சங்கமமாய்  போற்றப்படும் சீவலப்பேரியை மையமாய் கொண்டு என்னயினாப் புலவர் எழுதிய முக்கூடற்  பள்ளு எனும் இலக்கியம் புகழ் பெற்றது .
முதல் ராஜராஜனுடைய 28 ஆம் கல்வெட்டுகள் 1013 வருடம் வெட்டப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுக்கள் காணுமிடமான சீவலப்பேரியை அடுத்த சிற்றாறு (சித்திரா நதி) கலக்கும் பகுதியில் தாமிரபரணி நதியை தன் பொருந்தம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
ராஜ ராஜ சோழனின் மிக நீண்ட கல்வெட்டு தாமிர பரணிக் கரையில் உள்ள திருப் புடை மருதூர் ஆலயத்தில் உள்ளது 
கல்லிடைகுறிச்சிக்கு  மேற்கே கன்னடியன் அணைக்கு உள்ளே மணிமுத்தாறு நதி தாமிர பரணியோடு  கலக்கிறது. ராம நதியும், கடனா நதியுடன் சேர்ந்து அது கடனா நதியாக திருப்புடைமருதூரில்  கலக்கிறது. எதிரே ஒரு காலத்தில் வராக நதி வந்து சேர்ந்தது. . முற்காலத்தில் இந்த இரு நதிகளும் தாமிரபரணியில் சேர்ந்த காரணத்தால் இவ்விடம் முக்கூடல் எனப்படுகிறது.
சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் முற்பட்ட நாகரீகம் தாமிரபரணி ஆற்றுச் சமவெளி என்பதற்கான தரவுகள் தாமிரபரணிக் கரையோரக் கிராமமான ஆதிச்ச நல்லூரில் கிடைத்தன
திருநெல்வேலியிலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடம்தான் ஆதிச்ச நல்லூர் .
114 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய இடுகாடு .
தோண்டத் தோண்ட தமிழ் இனத்தின் தொன்மையும் புதைந்து கிடந்த உண்மையும் வெளியே வந்தன .
நான்கு அடிக்கு ஒருவர் வீதமாக இறந்த முதுமக்கள், ஈமத் தாழிகளில் அடக்கம் செய்யப்பட்டனர் .
 பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903-ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூர் மண்ணிலே தன் ஆய்வினைத் தொடங்கினார் .
அப்போது மண்வெட்டி, கொழு முத லியன கிடைத்தன
அருமையான தொல் பொருட்கள் வெளி நாடுகளுக்கு கொண்டு செல்லப் பட்டன .
“1905-ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறுத் துணை கண்காணிப்பாளர் அலெச்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித் துக் கொடுத்ததோடு அகழ்ந் தெடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம் பெறச் செய்தார். அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் - ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டு மல்ல, நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறிய முடிகிறது.” என்று ஆய்வாளர் சுகுமாரன் குறிப்பிடுகிறார் .
நூறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த பல பதிவுகளைத் தந்தது .
அங்கே கிடைத்த தாழிகளில்  இருந்த மண்பாண்ட எழுத்துக்கள் பிராமி லிபியினால் ஆனவை என்று சமீபகாலமாகக் கண்டறிந்துள்ளார்கள்.
நவதிருப்பதிகளையும் நவ கைலாயங்களையும் பெற்ற தாமிரபரணி நதிக்கரை தொன்மையின் தொட்டிலாகவும் திகழ்கிறது .
தாமிரபரணி எனும் தொன்மைத்  தொட்டில் 
முனைவர் .மகாதேவன்
 ,தமிழ்த் துறைத் தலைவர் ,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
திருநெல்வேலி 9952140275

சிந்துவெளி நாகரிகத்திற்குக் காலத்தால் முந்தியதாக விளங்குவது ஆதிச்சநல்லுர் அகழ்வாய்வுக் களம் என்கிற பொருனை நாகரிகம் ஆகும். இந்திய தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் ஆதிச்சநல்லூர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய தொல்லியல் துறையின் முதல் கண்காணிப்பாளரான அலெக்ஸாண்டர் ரீ ஆதிச்சநல்லூர் பறம்பில் 1899 முதல் 1906 வரை ஆகழ்வாராய்ச்சியை மேற்கொண்டார். இந்த அகழாய்வில் அறிஞர் ரீ அவர்கள் அகழ்ந்து கண்ட பொருட்களில் அணிபெறத் திகழும் மட்கலங்கள் 600க்கு மேல் உள்ளன. அவற்றில் சுமார் 100க்கு மேற்பட்டவற்றை அவர் வகுத்துத் தொகுத்துச் சென்னை அரசினரின் தொல்பொருள் காட்சியகத்தில் இடம் பெறச் செய்துள்ளார். அவை இன்றும் நாம் கண்டுகளித்து ஆய்வு செய்வதற்கு ஏற்றவையாகத் திகழ்கின்றன. மொத்தம் 110 கலங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கன அடியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் உள்ள கலன்களாகும். 1. கிண்ணம், 2.பானை, 3.சட்டி, 4.குண்டாபோணி, 5.பானைமூடி, 6.தாழி, 7.குதிர், 8.கலயம், 9.ம்ரவை, 10.செம்பு, 11.போணி, 12.குண்டா, 13.குண்டாசெம்பு, 14.சாடி, 15.உருளி, 16.பள்ளை, 17.குடுவை, 18.சிதை, 19.தம்ளர் வடிவான கிண்ணம், 20.மூக்கு கிண்ணம்(கெண்டி), 21.தாலம், 22.பாலி, 23.ரைக்காய் லோட்டா, 24.குடம், 25.கூசா, 26.தோண்டி, 27.தவலை, 28.சந்தனப்பேழை, 29.அகல், 30.குவளை, 31.வாணலி, 32.மையக் கிண்ணம், 33.முக்காலிக்குதில், 34.கொட்டுக்கடவை, 35 எண்ணெய் கிண்ணம், 36.தோசைகல், 37.பணியாரச்சட்டி, 38.முக்குளிச்சட்டி, 39.சுரைக்காய் போணி, 40.பொரிக்கன் சட்டி, 41.வட்டில், 42 வெண்ணெய்ச்சட்டி, 43.தயிர்பானை, 44.கும்பாச்சட்டி, 45.அண்டாச்சட்டி, 46 போணிச்சட்டி, 47.பொங்கல்படி பானை, 48.சோற்றுப்பானை, 49.குழம்புச்சட்டி, 50.தொட்டி.
அறிஞர் ரீ அவர்கள் படம் பிடித்து நமக்குத் தந்துள்ள 110 மட்கலன்களில் 50க்குத் தான் பெயர் காண முடிந்துள்ளது. மற்றவற்றுக்குப் பெயர் காண முடியவில்லை. பல மட்பாண்டங்கள் இன்று வழ்க்கொழித்து போனவையாக காணப்படுவதால் அவற்றின் பெயர்களை இன்று நம்மால் அறிந்து. கொள்ள முடியவில்லை. இங்கு பெயர் குறிப்பிடபட்டவற்றிலும் பல இன்று வழக்கில் இல்லாதவையாகக் காணப்படுகின்றன
.....................................................................................................................................................
சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் முற்பட்ட நாகரீகம் தாமிரபரணி ஆற்றுச் சமவெளி என்பதற்கான தரவுகள் தாமிரபரணிக் கரையோரக் கிராமமான ஆதிச்ச நல்லூரில் கிடைத்தன.

திருநெல்வேலியிலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடம்தான் ஆதிச்ச நல்லூர் .
114 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய இடுகாடு .

தோண்டத் தோண்ட தமிழ் இனத்தின் தொன்மையும் புதைந்து கிடந்த உண்மையும் வெளியே வந்தன .
நான்கு அடிக்கு ஒருவர் வீதமாக இறந்த முதுமக்கள், ஈமத் தாழிகளில் அடக்கம் செய்யப்பட்டனர் .

 பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903-ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூர் மண்ணிலே தன் ஆய்வினைத் தொடங்கினார் .
அப்போது மண்வெட்டி, கொழு முத லியன கிடைத்தன
அருமையான தொல் பொருட்கள் வெளி நாடுகளுக்கு கொண்டு செல்லப் பட்டன .

“1905-ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறுத் துணை கண்காணிப்பாளர் அலெச்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித் துக் கொடுத்ததோடு அகழ்ந் தெடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம் பெறச் செய்தார். அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் - ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டு மல்ல, நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறிய முடிகிறது.என்று ஆய்வாளர் சுகுமாரன் குறிப்பிடுகிறார் .

நூறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த பல பதிவுகளைத் தந்தது .
அங்கே கிடைத்த தாழிகளில்  இருந்த மண்பாண்ட எழுத்துக்கள் பிராமி லிபியினால் ஆனவை என்று சமீபகாலமாகக் கண்டறிந்துள்ளார்கள்.
நவதிருப்பதிகளையும் நவ கைலாயங்களையும் பெற்ற தாமிரபரணி நதிக்கரை தொன்மையின் தொட்டிலாகவும் திகழ்கிறது .

தாமிரபரணி எனும் தொன்மைத்  தொட்டில் .அருமையான இந்த  நாகரீகத்தை உலகின் பார்வைக்குத் தெளிவாகக் கொண்டு செல்லும் முயற்சியை நாம் உடன் எடுத்தாக வேண்டும்.ஒரு சில காட்சிமாதிரிகளுடன் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் உள்ள
ஆதிச்சநல்லூர் அதிசயங்கள் தனிச் சிறப்பு பெற்றஅருங்காட்சியகமாக அந்த மண்ணில் உருவாக்கப் படவேண்டும்.


முனைவர் ச .மகாதேவன்
 ,தமிழ்த் துறைத் தலைவர் ,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
திருநெல்வேலி