தினகரன்
திரு.செல்வராஜ் பாராட்டு
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பாளையங்கோட்டை தூய
சவேரியார் கல்லூரியில் பயிலும்போது தினகரன் சித்திரைமலர் ஆசிரியர் குழுவில்
இருந்தேன்.
தினகரன் சிறப்பிதழ்களுக்காக கேமராவுடன் அலைந்த நாட்களை இன்றைய தினகரன் கல்விக்கண்காட்சி நினைவுபடுத்தியது.
வண்ணார்ப்பேட்டை தினகரன் அலுவலகம் அப்போது,இன்றுள்ள சக்தி மருத்துவமனை உள்ள இடத்தில் இருந்தது.
அப்போது நிர்வாகப் பொறுப்பில் இருந்த திரு.செல்வராஜ் அவர்களை விழா மேடையில் பார்த்தபோது மனம் மகிழ்ந்தது.கல்லூரி மாணவர்களை அப்போதே ஊக்கப்படுத்தி இருக்கிறார்.முகநூல் தோழி விஜிஅவர்கள் இன்று நிகழ்ச்சியை அழகாகத் தொகுத்து வழங்கினார்.நாற்பது நிமிடநேரம் “ அடுத்து என்ன படிக்கலாம்?” என்ற தலைப்பில் பேசினேன்.அரங்கம் நிரம்பிவழிந்தது.மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டார்கள்.சன் தொலைக்காட்சியின் திரு.சிவகுமாரும்,தினகரன் செய்தியாளர்கள் திரு.முத்துகிருஷ்ணன்,திரு.ஜெகதீசன், ஆகியோர் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தினர்.சீனிவாசன் அழகாக நாளிதழில் செய்தியாக்கியிருந்தார். பழைய நினைவுகளின் படிக்கட்டில் விழா நிறுத்திவிட்டது.அருமையானகல்வித்திருவிழாவை தினகரன் நடத்தியது.மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

*
சௌந்தர மகாதேவன்
No comments:
Post a Comment