திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுரியில்
2.4.15 காலை 10 மணியளவில் அல்ஹாஜ் L.K.S மீரான் முகைதீன் தரகனார் அறக்கட்டளைச்
சொற்பொழிவு நடைபெற்றது.
மாண்புமிகு நீதியரசர் திரு.வெ.இராமசுப்பிரமணியன் சிறப்பு
விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலப்பாளையம் ஆட்சிக்குழு
உறுப்பினர் பொறியாளர் L.K.M.A. நவாப் ஹூசைன் வரவேற்றுப் பேசினார்.
ஆட்சிக்குழு
உறுப்பினர் அல்ஹாஜ் MKM முகமது நாசர், உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வள்ளிநாயகம்,
மூத்த வழக்கறிஞர் அப்துல்வகாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர்
முனைவர் மு.முகமது சாதிக் வாழ்த்திப் பேசினார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக
சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் திரு.வெ. இராமசுப்ரமணியன் கலந்துகொண்டு
“ இஸ்லாமும் சமூகப் பொருளாதாரமும்” என்ற தலைப்பில் அறக்கட்டளைச் சொற்பொழிவாற்றும்,
“ திருக்குர்ஆனின் “அல்ஹம்துலில்லாஹ்..” சூராவின் தமிழ் ஆக்கம் குறித்துப்பேசித்
தன் உரையைத் தொடங்கியவர், கம்பராமாயணத்தின் முதல்பாடாலான “ உலகம் யாவையும்
தாமுளவாக்கலும்..” என்ற பாடலோடு ஒப்பிட்டுப் பேசினார்.புதிய ஆத்திசூடிக்கு கடவுள்
வாழ்த்து எழுதிய பாரதி “ஆத்திசூடி இளம்பிறை அணிந்து..” என்று
சிவபெருமான்,திருமால், அல்லா, ஏசுநாதர்,பிரமபிதா என்று அனைத்துசமயக்
கடவுளர்களையும் ஒரேபாடலில் தந்து அவர்களின் பெயர் வேறுவேறாக இருந்தாலும் பரம்பொருள்
ஒன்றே என்று பாடி முடித்திருப்பார். 1987 இல் நடந்த என் திருமணத்தில் பத்திரிக்கையின் மேல்பகுதியில் “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்
ரஹீம்” என்ற வாசகத்தோடு மும்மத வாசகத்தையும் இடம்பெறச் செய்து, தீயை வலம்வரும் சப்தபதியைப்
பற்றியும் தந்திருந்தேன். ஒரு லட்சரூபாய் ஊதியம் பெறும் ஒருவன் யாருக்கும் தராமல்
மனநிறைவு இல்லாமல் வாழ்வதைவிட இருபதாயிரம் ரூபாய் ஊதியத்தில் மனநிறைவுடன்
மற்றவர்க்கு ஜகாத் கொடுத்து வாழும் வாழ்வு நிறைவானதாய் அமைகிறது.பணம் கொண்டு
எல்லாவற்றையும் வாங்கிவிட முடியாது. எல்லோரும் ஜகாத் பணத்தை உரியமுறையில்
தரத்தொடங்கிவிட்டால் எல்லோரும் எல்லாமும் பெறமுடியும்,இல்லாத நிலை இல்லாமல்
போகும்.வட்டியில்லா இஸ்லாமியப் பொருளாதாரம் சிறப்பானது.பணத்தைக் கோடிகோடியாக
வீட்டிற்குள் கருப்புப் பணமாய் பதுக்கிவைப்பதைவிட
அந்தப் பணத்தை ஒரு தொழிலில் முதலீடு செய்தால் அதைநம்பி ஆயிரமாயிரம்
தொழிலாளர் வேலைவாய்ப்புப் பெறுவர்.அவர்கள் முறையாக ஜகாத் தருவர்,அந்தப் பணம்
ஏழைகளைச் சென்றடைந்து பொருளாதாரம் மேன்மையடையும்.முறையற்ற வழியில் சேர்த்த பணத்தை
ஏழைகளுக்குக் கொடையாய் கொடுப்பதை இறைவன் விரும்புவதில்லை.வீடு முன்னேறினால்
நாடுமுன்னேறும், நாடு முன்னேறினால் நாமும் முன்னேறுவோம். மற்றவரை ஏமாற்றிக்
கோடிகோடியாய் பணம் சம்பாதிப்பதைவிட மற்றவர்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தல்
உன்னதமானது.வருமானப் பணத்தை அப்படியே செலவு செய்வதைவிட சிக்கனமாகச்
சேமித்துவைக்கும் பழக்கம் பெண்களிடம் உண்டு.அது நாட்டுப் பொருளாதாரத்தின்
அடிப்படை” என்று உரையாற்றினார்.
மேலப்பாளையம் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளித் துணைத்
தலைவர் LKS மீரான்மைதீன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment